இலங்கை தமிழ்செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனம் மற்றும் வடமராட்சி
இலங்கை தமிழ்செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனம் மற்றும் வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவன அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இக்குறித்த கலந்துரையாடலில் செவிப்புல வலுவிழந்தோர் நிறுவன பிரதிநிதிகளால் மாவட்ட அரசாங்க அதிபரிடம் "கடந்த காலங்களில் தமிழ் சைகைமொழி எவ்வித இடையூறுமின்றி கற்பிக்கப்பட்டதெனவும் தற்போது இத் தமிழ் சைகைமொழியை கற்பதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதோடு, யாழ். அரச அதிபரின் ஆளுகைக்குட்பட்ட சைகைமொழி மொழிபெயர்ப்பாளர்களிற்கான தமிழ் சைகைமொழி பயிற்சி நெறியினை நடாத்துவதற்கும், அதற்கான விண்ணப்ப படிவங்களை அரச அதிபரின் ஊடாக பெறவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும், செவிப்புல வலுவிழந்தோரின் மோட்டார் வாகனங்களில் முன்னும் பின்னும் செவிப்புல வலுவிழந்தோர் என்பதை குறிக்கும் அடையாள குறியீட்டு பாவனைக்கும் அனுமதி கோரப்பட்டதுடன், அரச தனியார் துறையினரிற்கு சைகை மொழி பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகளை நடாத்தவும் அனுமதிகோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.